தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கையில், “விஜய் தோற்றுவிடுவார்” எனச் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் முன்வைத்த விமர்சனங்கள் தவிடுபொடியாகி வருகின்றன.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய், ஆரம்பம் முதலே அசுரத்தனமான முன்னிலை பெற்று விமர்சகர்களின் வாயை அடைத்துள்ளார். குறிப்பாக, பெரம்பூரில் முதல் சுற்றிலேயே சுமார் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரைப் பின்னுக்குத் தள்ளிய விஜய், திருச்சி கிழக்கிலும் அதே போன்றதொரு மாபெரும் முன்னிலையைத் தக்கவைத்துள்ளார்.

“விஜய்க்கு அரசியல் தகுதி இல்லை, அவர் டெபாசிட் இழப்பார்” எனச் சவால் விட்டவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இரண்டு தொகுதிகளிலும் அவர் பெற்று வரும் வாக்குகள் தவெக-வின் விஸ்வரூபத்தை உறுதி செய்துள்ளன.

“>

 

தேர்தல் களத்தில் வெறும் பில்டப் என்று ஒதுக்கப்பட்ட விஜய்யின் அரசியல் வருகை, இப்போது வாக்கு எண்ணிக்கையில் நிஜமாகி வருவதால், சாட்டை துரைமுருகன் போன்றவர்களின் கணிப்புகள் முற்றிலுமாகத் தோல்வியைத் தழுவியுள்ளன.