ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில், நர்சிங் அதிகாரியாக பணியாற்றி வரும் நானு ராம் சவுத்ரி என்பவர் மீது தனக்கு கீழ் பணியாற்றும் நர்சிங் பெண் உதவியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடும் புகார் எழுந்துள்ளது.
சம்பவத்தன்று இரவு, வேலை நேரத்தில் பெண் நர்சை தனியாக ஒரு அறைக்குள் அழைத்த நானு ராம், அவரிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த மற்ற பெண் மருத்துவ ஊழியர்கள், போராட்டத்தில் இறங்கி மருத்துவமனை வாசலில் கூடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நானு ராம் சவுத்ரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
