சமூக வலைதளங்களில், கணவனை அடிக்கின்ற மனைவியின் ஒரு அதிர்ச்சியான வீடியோ தீயாய் பரவி வருகிறது. வீடியோவில், ஒரு பெண் தனது கணவனை அரைநிர்வாணமாக்கி , தடியால் கொடூரமாக  அடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

அவர் தன்னைக் காப்பாற்ற முடியாமல் நொந்த நிலையில் காணப்படுகிறார். இதையொட்டி, அவருடைய குழந்தைகளும் அருகிலேயே நின்று அதிர்ச்சியுடன் பார்ப்பது போல் காட்சிகள் உள்ளன. கணவன் மனம் கனிந்து கெஞ்சிய போதும் , எவரும் தலையிடவில்லை என்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில், அந்த பெண் தனியாகவே கணவனிடம் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றார். கணவன் தன்னை காப்பாற்ற கத்தி கொண்டு உட்கார்ந்தாலும், அவர் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துகிறார். வீடியோவில் அவரை அடிக்க ‘தடி’ பயன்படுத்தப்படுவது வெளிப்படையாக தெரிகிறது. இது ஏன் நடந்தது? அவர்களுக்கு இடையில் என்ன பிரச்சனை ஏற்பட்டது? என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

“>

 

இந்த வீடியோ, கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி X பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதுவரை 18,000-க்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு கருத்துக்களும் பதிவாகியுள்ளது. “இது கிராமங்களில் சாதாரணமானது”, “ விமர்சனம் தெரிவிக்கின்றனர். இது போன்ற வீடியோக்கள் சமூகத்தில் பெரும் விவாதங்களை கிளப்பி வருகின்றன.