தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது செப்-15 ஆம் தேதி தொடக்கி வைக்கப்பட்டது. இதில் ஏராளமானவர்களுக்கு பணம் கிடைத்த நிலையில் பலருக்கும் கிடைக்காமல் போயுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் குலப்பெண்பட்டி கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 திட்டத்தில் விண்ணப்பித்த காலணி தைக்கும் தொழில் செய்யும் சித்ரா என்ற பெண்ணின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடும்பத்தில் அரசு ஊழியர்கள்/ அரசு ஓய்வூதியம் பெறும் நபர்கள் இருப்பதால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண், தான் அரசு வேலை செய்யவில்லை, அப்படி என்றால் தனக்கு அரசு வேலை வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்