கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மீனாட்சிபுரம் அண்ணா பேருந்து நிலையம் பின்புறம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ளது. இந்த பணிமனைக்கு அருகே ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் இருக்கிறது. இந்நிலையில் பணிமனையின் முன்பு இருக்கும் குடோனில் பேருந்துகளின் பழைய இருக்கைகள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறி சிறிது நேரத்தில் தீ கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

இதனை பார்த்ததும் போக்குவரத்து ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குடோன் ஆஸ்பெட்டாஸ் சீட் மேற்கூரை வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பழைய பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் அருகே இருந்த ஹோட்டலின் ஒரு புறமும் சேதமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.