டெல்லி போக்குவரத்து கழக (DTC) பேருந்தில் பயணித்த ஒரு பெண், பெண்களுக்கு வழங்கப்படும் இலவச ‘பிங்க் டிக்கெட்’ கொடுக்குமாறு கேட்டபோது, நடத்துனர் அதை மறுத்துள்ளார். அதாவது இலவச ‘டிக்கெட்டை ஆன்லைனில் வாங்க வேண்டும்’ எனக் கூறி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணுக்கும் நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அபோது நடத்துனர் அந்த பெண்ணை வீடியோ எடுத்தார்.

இதனால் கோபம் அடைந்த அந்த  பெண் தனது தனியுரிமை மீறப்படுவதாகக் கருதிய அந்த பெண், நடத்துனரின் மொபைல் போனைக் கைப்பற்றியுள்ளார். இதையடுத்து, நடத்துனர் ‘பணத்தை பறித்துச் சென்றார்’ என பொய்யான புகாரை முன்வைத்துள்ளார். இந்த சண்டையையும், உண்மையான நிலமையையும் மற்றொரு பயணி தனது மொபைலில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, விவாதப்பொருளாக மாறியுள்ளது. அந்த பெண்ணின் செயலுக்கும் கண்டங்கள் குவிந்து வருகிறது.