இந்தியாவில் மத்திய அரசு மக்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெரும் விதமாக மத்திய அரசால் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் இதனை மக்கள் பலரும் அறியாமலேயே உள்ளனர்.

இந்த நிலையில் அரசு தொடர்பான தகவல்களை சரிபார்க்கவும் போலி செய்திகளில் இருந்து மக்களை விழிப்புணர்வு பெற செய்யவும் PIB Fact check என்ற பக்கத்தை சமூக வலைத்தளங்களில் மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில் அரசு தொடர்பான தகவல்களை பொதுமக்கள் சரிபார்க்க முடியும். 8799711259 என்ற எண்ணிலும், factcheck@pib.gov.in என்ற இணையதளத்திலும் அரசு தகவல்களை பொதுமக்கள் சரிபார்த்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.