தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வரும் நிலையில் மின்வாரிய ஊழியர்களுக்கு 25% அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்பட வேண்டும் என அந்தந்த துறைக்கு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அதன்படி மின்வாரியத்தில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள் மற்றும் பகுதிநேர ஊழியர்கள் என அனைவருக்கும் 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் எனவும் நிலை ஒன்று மற்றும் இரண்டில் பணியாற்றும் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஐந்தாயிரம் தீபாவளி பரிசாக வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை போனசாக வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு இந்த வருடம் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.