தமிழக இளைஞர்களுக்கு கட்டணம் இல்லாமல் கோடிங் பயிற்சி வழங்கும் வகையில் சென்னை ஐஐடியின் தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான குவி, நான் முதல்வன் -தமிழ்நாடு கோடர்ஸ் பிரீமியர் லீக்கை தொடங்கியுள்ளது. அதன்படி சென்னை ஐஐடி மற்றும் ஐஐ எம் அகமதாபாத் ஆகியவற்றின் தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான குவி தமிழகத்தில் ஒரு லட்சம் பொறியியல் மாணவர்களுக்கு ஹேக்கத்தான்கள் மூலம் பயிற்சி வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவற்றோடு இந்த நிறுவனம் கூட்டு முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலமாக மூன்று மாதங்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஹேக்கத்தான்கள் நடத்தப்படும் என்றும் தமிழகத்தில் உள்ள ஆர்வமுள்ள பொறியியல் மாணவர்கள் தங்களின் கோடின் திறமையை வெளிப்படுத்தவும் மதிப்புமிக்க வாய்ப்புகளை பெறுவதற்கும் இலவசமாக கிடைக்கும் தளமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இணைவதால் இலவச திறன் மேம்பாட்டு படிப்புகள், திறமையை வெளிக்காட்டுதல், நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் மற்றும் பரிசுகள் என பல பலன்களை மாணவர்கள் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.