நாடு முழுவதும் மாத சம்பளம் பெரும்  ஊழியர்கள் வருடத்திற்கு 5 லட்சத்திற்கும் குறைவாக சம்பளம் பெற்றால் வருமான வரி செலுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதாவது மொத்த வருமானத்திலிருந்து வீட்டு வாடகை, நன்கொடை போன்ற செலவுகள் கழிக்கப்பட்டு வருட சம்பளம் 5 லட்சத்திற்கும் மேலிருந்தால் மட்டுமே வருமான வரி கட்டாயமாக செலுத்த வேண்டும். இருப்பினும் பல்வேறு ஊழியர்கள் வருமான வரி செலுத்தக்கூடாது என்பதற்காக போலியான வீட்டு வாடகை ஒப்படைத்ததாக புகார் எழுந்து வந்தது.

இந்த நிலையில் போலியான ஆவணங்களை கண்டுபிடிக்க வருமான வரித்துறை புதிய சாப்ட்வேர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாகவே மாத சம்பளம் பெறும் ஊழியர்கள் ஒப்படைத்த போலியான ஆவணங்கள் கண்டறியப்பட்டு 200% வரைக்கும் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் போலியான ஆவணங்களை ஒப்படைத்த ஊழியர்களுக்கு எச்சரிக்கை மற்றும் அபராத நோட்டீஸ் வழங்கப்பட்டு வருவதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.