மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இலவச சிகிச்சை வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம், கிராமப்புற மருத்துவமனைகள், மகளிர் மருத்துவம், மாவட்ட பொது மருத்துவமனைகள், பல்நோக்கு மருத்துவமனைகள் மற்றும் புற்றுநோய் மருத்துவமனைகளில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் இலவச சிகிச்சை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் மொத்தமாக 2418 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.