தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அரசியல் நாகரிகத்தின் அடுத்தகட்டமாக இன்று ஒரு மிக முக்கியமான சந்திப்பை நடத்தவுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி இன்று தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அவருக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டமன்றத்தில் ஒரு ‘புதிய யதார்த்தம்’ நிலவும் சூழலில்,  வீட்டிற்கே சென்று முதலமைச்சர் வாழ்த்துவது தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இபிஎஸ் – விஜய் இடையேயான இந்தச் சந்திப்பு வெறும் பிறந்தநாள் வாழ்த்தோடு நிற்குமா அல்லது அரசியல் ரீதியான ஏதேனும் விவாதங்கள் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு இப்போதே எகிறத் தொடங்கியுள்ளது.