தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மதுவிலக்கை நோக்கித் தனது முதல் அதிரடிப் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார்.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிரடி அரசாணையில், மாநிலம் முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் மொத்தம் 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதில் குறிப்பாக, வழிபாட்டுத் தலங்களுக்கு அருகாமையில் உள்ள 276 கடைகள், பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ள 186 கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாகப் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 255 கடைகள் எனப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவற்றுக்கு மூடுவிழா நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

“பெண்கள் மற்றும் மாணவர்களின் நலனே முக்கியம்” என முழங்கி வரும் முதலமைச்சரின் இந்த அதிரடி ஆக்‌ஷன், தமிழகம் முழுவதும் உள்ள இல்லத்தரசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், அரசியல் வட்டாரத்திலும் அனலைக் கிளப்பியுள்ளது.