தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு குறித்து அதன் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா ஒரு அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், திரையில் விஜய்யின் பெயரை எப்படி அறிமுகப்படுத்துவது என்பது குறித்துப் பல விவாதங்கள் எழுந்தன. இது குறித்துப் பேசிய தயாரிப்பாளர், சட்டரீதியாக இடம் இருந்தால், படத்தின் டைட்டில் கார்டில் “தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்” என்றே போடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமா வரலாற்றில், பதவியில் இருக்கும் ஒரு முதலமைச்சரின் பெயர் படத் திரையில் அவரது பதவியுடன் இடம்பெறுவது இதுவே முதல்முறையாக இருக்கும் என்பதால், ரசிகர்கள் மத்தியில் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் அரசியல் கதைக்களம் கொண்டது என்பதால், இந்த புதிய டைட்டில் கார்டு திரையரங்குகளை அதிரவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
