மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், தமது தலைவர் மறைந்த விஜயகாந்த் மற்றும் தவெக தலைவர் விஜய் இடையே இருந்த நட்பு குறித்து பேசினார். “விஜயகாந்த்-விஜய் இடையே நல்ல உறவு இருந்தது. இதுவரை அதை திரைத்துறையில் யாரும் சொல்லாத நிலையில், அரசியலுக்கு வந்த பிறகு தான் விஜய் வெளிப்படையாக கூறியுள்ளார்” என்றார்.
மேலும், “என்ன பேசினாலும், விஜயகாந்த் ரசிகர்கள் வேறு எந்தக் கட்சிக்கும் செல்ல மாட்டார்கள். அவர்கள் தங்கள் தலைவரின் கொள்கைகளை பின்பற்றியே இருப்பார்கள்” எனவும் தெரிவித்துள்ளார். இந்த கருத்து, தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலையில் தேமுதிக தொண்டர்களின் மனநிலையை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
