நடிகர் விஜய் தமிழக மக்கள் வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். இந்நிலையில் அரசியலுக்கு வருவதில் விஜய் அவசரப்பட்டு விட்டாரோ என ரசிகர்களிடையே கருத்து நிலவுகிறது. 49 வயதான விஜய் நடிக்கும் கதாபாத்திரம், அவரை இளைஞராகவே பிரதிபலிக்கிறது.

இது படத்துக்கு பயன்படுமே தவிர, அரசியலுக்கு உதவாது. அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலினின் முதிர்ச்சியே அவர்களை வெற்றியடைய செய்தது. விஜய்யை இளைஞராகவே மக்கள் பார்ப்பதால், இன்னும் சில காலம் அவர் பொறுத்து இருந்திருக்கலாம் என்பதே கருத்தாக உள்ளது.