எதிர்வரும் சவால்களை சமாளித்து விஜய் தமிழக அரசியலில் வலம் வருவார் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிதாக அரசியல் கட்சியை தொடங்கியுள்ளளார் விஜய். மேலும் சுமார் ஒரு கோடி உறுப்பினர்களை இணைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக சமூக ஊடகங்களில் தனிப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இளம் வாக்காளர்களை கவருவதற்காக சமூக வலைதள பக்கங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. மேலும், அரசியல் கட்சிக்காக பிரத்யேக செயலி ஒன்றை உருவாக்கும் பணியிலும் விஜய் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் விஜய் அரசியல் பயணம் குறித்து  பேட்டியளித்துள்ள ஓபிஎஸ், ‘சிறந்த திரைப்பட நடிகரான விஜய், புதிய கட்சியை தொடங்கியுள்ளதற்கு எங்களுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். எதிர்வரும் சவால்களை சமாளித்து விஜய் தமிழக அரசியலில் வலம் வருவார் என்றார்.