அறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளையொட்டி கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில்,  இருமொழிக்கொள்கை இறந்துபடவில்லை. மாநில சுயாட்சிக்கான காரணங்கள் இன்னும் காலமாகிவிடவில்லை. பகுத்தறிவின் வேர்கள் பட்டுவிடவில்லை, இனமானக் கோட்டை இற்றுவிடவில்லை, சமூக நீதிக்கொள்கை அற்றுவிடவில்லை.

மதவாத எதிர்ப்பு மாண்டுவிடவில்லை. எப்படி நீமட்டும் இறந்துபடுவாய் அண்ணா?. நிழல் விழுந்தால் பொருள் இருக்கிறது என்று பொருள். லட்சியம் வாழ்ந்தால் அந்த மனிதன் வாழ்கிறான் என்று பொருள். இன்னும் நீ இருக்கிறாய் அண்ணா! எங்கள் கொள்கை வணக்கம் “என பதிவிட்டுள்ளார்.