வடக்கு பெல்ஃபாஸ்ட்டின் கின்னார்ட் அவென்யூ பகுதியில் திங்கள்கிழமை இரவு சுமார் 10:30 மணியளவில், ஒரு நபர் மற்றொரு நபரை கத்தியால் கொடூரமாக தாக்கி, அவரது தலையை துண்டிக்க முயன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேலும் சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த கொடூரமான தாக்குதல் குறித்த வீடியோவில், தாக்குதல் நடத்தியவர் பாதிக்கப்பட்ட நபரின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் ஸ்டான்லி கத்தியால் மீண்டும் மீண்டும் வெட்டுவது பதிவாகியுள்ளது.

“>

 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் “அவனை தடுத்து நிறுத்துங்கள், அவன் தலையை துண்டிக்க முயல்கிறான்” என்று அலறியபடியே, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்தியவனை நபரிடமிருந்து வலுக்கட்டாயமாக இழுத்து தடுத்து நிறுத்தினர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வடக்கு அயர்லாந்து காவல்துறை, தாக்குதலில் ஈடுபட்ட நபரை கைது செய்து காவலில் வைத்துள்ளதாகவும், படுகாயமடைந்த பாதிக்கப்பட்ட நபர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.