கோயம்புத்தூர் மாவட்டம், விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் பலர், திடீரெனக் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது, திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளாங்குறிச்சியின் திமுக 9-வது வட்டச் செயலாளர் மயில்சாமி தலைமையில், 75-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களது பதவிகளில் இருந்து விலகுவதாக, திமுக தலைமைக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

​இந்த திடீர் ராஜினாமாவுக்கு, ‘தனிப்பட்ட காரணங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கொங்கு மண்டலத்தில் திமுகவை வலுப்படுத்த எடுத்து வரும் தீவிர முயற்சிகளுக்கு, இந்தச் செயல் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் திமுகவின் உட்கட்சிக்குள் எழுந்துள்ள இந்தப் பிரச்சனை, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.