அதிமுக முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சி.வி. சண்முகம், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனது சொந்த கிராமமான அவ்வையார் குப்பத்தை உள்ளடக்கிய மயிலம் தொகுதிக்கு மாற முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே 2001 மற்றும் 2006-ஆம் ஆண்டு திண்டிவனத்தில் வென்ற அவர், ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் 2011 மற்றும் 2016-இல் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு 10 ஆண்டுகள் அமைச்சர், எம்.எல்.ஏ.வாக நீடித்தார். ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் திமுக வேட்பாளர் லட்சுமணனிடம் சுமார் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, இம்முறை அவர் தொகுதி மாறி மயிலத்தில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், மயிலம் தொகுதியில் போட்டியிடச் சி.வி. சண்முகம் சார்பில் அவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் விருப்ப மனு அளித்துள்ளனர்.