தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் உடல்நிலை குறித்த அவரது பேத்திகளின் உருக்கமான பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பரப்புரையின் போது பேசிய அவர்கள், “ராமதாஸ் அய்யாவை எங்களால் பார்க்கக் கூட முடியவில்லை; எங்கள் குழந்தைக்கு 5 மாதங்கள் ஆகியும், இதுவரை அவர் வந்து பார்க்கவில்லை” எனத் தங்களது ஆதங்கத்தைக் கொட்டினர். மேலும், ராமதாஸின் அருகில் இருக்கும் சில ‘துரோகிகள்’ அவரைத் தங்கள் குடும்பத்தினரிடம் கூடப் பேச விடாமல் தடுத்து வருவதாகவும், உடல்நிலை குன்றியிருக்கும் நிலையிலும் அவரைத் தொடர்ந்து பரப்புரைக்கு அழைத்துச் சென்று கஷ்டப்படுத்துவதாகவும் அவர்கள் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
மனம் நொந்து பேசிய சௌமியா அன்புமணி மகள்கள் | Anbumani Ramadoss | PMK | Tamil News #pmk #anbumaniramadoss #ramadoss #tamilnews pic.twitter.com/oVVVWpW5i7
— பாட்டாளி தோழன் (@PattaliThozhan) April 16, 2026
“>
“அய்யா மேடையிலேயே மயங்கி விழும் அளவுக்கு அவரைத் துன்புறுத்துகிறார்கள்” என்று அவர்கள் கண்கலங்கப் பேசிய வீடியோ, பாமக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
