தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சசிகுமார். இவர் அயோத்தி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படத்தின் இயக்குனர் மந்திரமூர்த்திக்கு தங்க செயினை பரிசளித்தார். அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் அயோத்தி திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் வெற்றியை தொடர்ந்து படக்குழு சார்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அப்போது இயக்குனர் மந்திரமூர்த்தி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோருக்கு நடிகர் சசிகுமார் தங்க செயினை பரிசாக வழங்கினார். புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.