தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்குனராக இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வைரம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் லாக்கரில் வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் வீட்டு பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஐஸ்வர்யா போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.