வீட்டில் டீ போட அடுப்பு இல்லையென்றால் என்ன, நம் ஊர் ஆட்களின் புத்திக்கு முன்னால் இதெல்லாம் ஒரு தூசு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், வாலிபர் ஒருவர் அடுப்பு அல்லது கெட்டில் இல்லாத சூழலில், தான் தங்கியிருக்கும் அறையில் இருந்த ‘ஸ்டீம் அயர்ன்’ பெட்டியைப் பயன்படுத்தி மிக லாவகமாக டீ போடுகிறார்.
மேலும் அயர்ன் பாக்ஸைத் தலைகீழாக வைத்து, அதன் சூட்டில் பாத்திரத்தை ஏற்றி, பால் மற்றும் டீத்தூள் சேர்த்து அவர் தேநீர் தயாரிக்கும் இந்த வினோதமான முறை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் செயலைப் பார்த்த நெட்டிசன்கள், “இந்த மாதிரியான திறமையெல்லாம் இந்தியாவை விட்டு வெளியே எங்கும் கிடைக்காது” என வேடிக்கையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
இந்நிலையில் “இந்தியா ஒரு நாடு மட்டுமல்ல, அது ஒரு உணர்வு” என்றும், அவசரத் தேவைகளுக்கு இந்தியர்கள் கண்டுபிடிக்கும் இத்தகைய குறுக்குவழித் தீர்வுகள் உலகத்திற்கே பாடம் என்றும் பாராட்டி வருகின்றனர். எது எப்படியோ, தேநீர் பிரியர்களின் தாகத்தைத் தீர்க்க எந்தப் பொருளையும் அடுப்பாக மாற்ற முடியும் என்பதை இந்த நபர் நிரூபித்துவிட்டார்.
