ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 40-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதவுள்ள நிலையில், அந்த அணியின் ஆல்-ரவுண்டர் அஸ்மத்துல்லா உமர்சாயின் தாயார் காலமான செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான ஆப்கானிஸ்தான் வீரரான உமர்சாய், தனது தாயின் மறைவுச் செய்தியை திங்கள்கிழமை (ஏப்ரல் 27) அன்று அறிந்து நிலைகுலைந்து போயுள்ளார். இந்தத் துயரமான நேரத்தில் முகமது நபி மற்றும் கரீம் ஜனத் உள்ளிட்ட சக வீரர்கள் அவருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
Our heartfelt condolences go out to Azmatullah Omarzai on the loss of his mother. The entire Punjab Kings family stands with him and his loved ones during this difficult time.
— Punjab Kings (@PunjabKingsIPL) April 27, 2026
பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “உமர்சாயின் தாயார் மறைவுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் பஞ்சாப் கிங்ஸ் குடும்பம் முழுவதும் அவருக்கு துணையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளது. இந்த சீசனில் பஞ்சாப் அணியின் முக்கிய வீரராக ₹2.40 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட உமர்சாய், தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று நடக்கும் முக்கியமான போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
انا لله واناالیه راجعون
I am deeply saddened to hear that the respected mother of Nawab Khan Umarzai and our national team player @AzmatOmarzay has passed away.May Allah Almighty grant her soul the highest place in Jannah and bless the entire family with patience and strength.
— Mohammad Nabi (@MohammadNabi007) April 27, 2026
