அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோர் த.வெ.க.வில் இணைந்ததைத் தொடர்ந்து அவர்கள் பேசிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய உடுமலை ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ.க்களாகவும், அமைச்சர்களாகவும் உயர்த்தப்பட்ட நாங்கள்,  விஜய் தலைமையை ஏற்று இணைந்துள்ளோம் என்றார். மேலும், எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் பார்த்தது போலவே

விஜய்யையும் பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் முடிவுகளுக்குப் பின் அதிமுகதலைமை எடுத்த சில முடிவுகள் திருப்தி அளிக்கவில்லை என்றும், அம்மா உணவகத்தைத் தற்போதைய த.வெ.க. அரசு சிறப்பாகச் சீரமைத்துச் செயல்பட வைப்பதாகவும் பாராட்டிப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, 2011 சட்டமன்றத் தேர்தலின்போதே தங்களுக்கு உறுதுணையாக இருந்தது விஜய் நற்பணி மன்றம் தான் என்றும், அந்த ஆதரவு

இன்றும் தொடர்வதாகவும், தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கிலேயே த.வெ.க.வில் இணைந்ததாகவும் அதிரடியாகத் தெரிவித்தார்.