நடிகை கௌரி கிஷன் கேரளாவை சேர்ந்தவர். தமிழில் 2018 ஆம் வருடம் வெளியான விஜய் சேதுபதியின் 96 படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து மார்க்களி என்ற மலையாள படத்தில் நடித்தார். பின்னர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். அதனை தொடர்ந்து அடியே , போட் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
View this post on Instagram
சுழல்-2 வெப் சீரிஸில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். இதில் ஆக்ஷன் காட்சிகளில் கௌரி கிஷன் பட்டையை கிளப்பி இருந்தார். இந்த நிலையில் அந்த சண்டை காட்சிகளுக்கு எவ்வாறு பயிற்சி மேற்கொண்டார் என்று குறித்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
