“அம்பயர் மேல ஐஸ் பேக் வீசிய டிம் டேவிட்!” என்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஆர்சிபி அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிம் டேவிட்டிற்கு ஐபிஎல் நிர்வாகம் ஒரு போட்டிக்கு அதிரடி தடை விதித்துள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியின் போது, நடுவர் நிதின் மேனனை நோக்கி ஐஸ் பேக் ஒன்றை ஆக்ரோஷமாக வீசிய குற்றத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் 2027 தொடரின் முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை டிம் டேவிட் இழந்துள்ளார்.
Tim David fined 50% of match fee + 2 demerit points for throwing ice bag in direction of umpire Nitin Menon (IPL Code breach).
Now on 5 points → suspended for RCB’s 1st match of next IPL season. pic.twitter.com/D4CPhvH95L
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 1, 2026
இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் விக்கெட் விழுந்த போது, டிம் டேவிட் உணர்ச்சிவசப்பட்டு நடுவரை நோக்கி ஐஸ் பேக்கை வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதிகளின்படி இது லெவல் 1 குற்றமாக கருதப்பட்டு, அவரது போட்டி ஊதியத்தில் இருந்து 50 விழுக்காடு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடப்பு சீசனில் அவர் செய்யும் மூன்றாவது லெவல் 1 குற்றம் இது என்பதால், அவரது ஒட்டுமொத்த டெமரிட் புள்ளிகள் ஐந்தாக உயர்ந்தது. இதன் காரணமாகவே அவருக்கு தானாகவே ஒரு போட்டி சஸ்பென்ஷன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த சீசனில் அவர் ஆர்சிபி அணியில் விளையாடினாலும் அல்லது வேறு அணிக்கு மாறினாலும், அந்த அணியின் முதல் போட்டியில் அவர் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
