
2006 – 2011 திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன் ஆகியோர் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை (ஜூலை 6) தீர்ப்பு வழங்க உள்ளது. சமீபத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில், நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்த நிலையில், தற்போது மற்றொரு அமைச்சரின் தீர்ப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.