நிலவின் தென் துருவத்தை ஆராய சந்திராயன் 3 திட்டத்தை சுமார் 615 கோடி செலவில் செயல்படுத்த கடந்த 2020 ஆம் வருடம் இஸ்ரோ முடிவு செய்தது. அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளாக இதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் 13ஆம் தேதி மதியம் 2:30 மணிக்கு ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் சந்திராயன் 3 விண்ணில் ஏவப்பட உள்ளது.

இதற்காக செமி கிரயோசனின் பவர்கேட் என்ஜின் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ உந்தும வளாகத்தில் தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டம் 4 வினாடிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மகேந்திரகிரி இஸ்ரோ உந்தும வளாகத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் வளாக இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் இஸ்ரோ தொழில்நுட்ப பணியாளர்கள் முன்னிலையில் இலக்கு நிர்ணயத்தபடி நான்கு வினாடிகள் வெற்றிகரமாக சோதனை நடைபெற்றதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.