அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பள்ளிக்கல்வித்துறையில் ஏராளமான பிரச்சனைகள் மற்றும் குளறுபடிகள் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அதாவது தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 10000 போலி ஆசிரியர்கள் பணி புரிவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது தொடர்பாக தவறு செய்த சில ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். முன்னதாக அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை கூடுதலாக காட்டிய ஆசிரியர்கள் மோசடி செய்ததும் தெரியவந்த நிலையில் அது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இ

ப்படி அரசு பள்ளியில் சமீப காலமாக சர்ச்சைகள் எழும் நிலையில் தற்போது அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பள்ளிக்கல்வித்துறையில் நாளுக்கு நாள் மோதல் போக்கு என்பது அதிகரித்துவிட்டது. எனவே தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நீடித்தால் கல்வியில் பின் தங்கும் நிலை உருவாகும். எனவே அவரை அமைச்சர் பதவியில் இருந்து உடனே நீக்குக. மேலும் அவருக்கு உதயநிதியின் உதவியாளராக பொறுப்பு கொடுத்தால் சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.