10 மற்றும் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த முக்கிய உத்தரவு அனைத்துப் பள்ளிகளுக்கும் பறந்துள்ளது. கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், 10 மற்றும் +2 வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் கால்குலேட்டர்களைப் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளார். இது தேர்வெழுதும் மாணவர்களுக்கு மிகவும் சாதகமான அறிவிப்பாகும். குறிப்பாக, கணக்குப் பதிவியல் (Accountancy) தேர்வின்போது இந்த அனுமதி கிடைத்துள்ளது.
இதுவரை பொதுத்தேர்வில் கால்குலேட்டரைப் பயன்படுத்த அனுமதி இல்லாத நிலையில், இந்த அறிவிப்பு முதல் முறையாக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை உடனடியாக அமல்படுத்த அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முடிவு, மாணவர்கள் கணக்கீடுகளில் அதிக நேரம் செலவழிப்பதைத் தவிர்த்து, விடையளிப்பதில் கவனம் செலுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
