ஜியோ தனது பயனர்களுக்காக புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதாவது 857 ரூபாய் கட்டணம் செலுத்தும் ரீசார்ஜ் உடன் புதிய ப்ரீபெய்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது OTT சந்தாவுடன் கிடைக்கின்றது. அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சந்தாவுடன் 84 நாட்கள் செல்லுபடி ஆகும் 2ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் வருகிறது. கோடைகால சலுகையாக இந்த திட்டம் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது.