டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் அமெரிக்கப் பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடுமை சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியத் திருமணத்திற்காக வந்திருந்த அந்தப் பெண்ணிடம், ஒரு பதின்பருவச் சிறுவன் புகைப்படம் எடுக்க விரும்புவது போல நடித்து, மிகவும் அநாகரீகமாக நடந்துகொண்டான். எதிர்பாராத விதமாக அந்தச் சிறுவன் அத்துமீறிச் செயல்பட்டதால் அப்பெண் கடும் கோபமடைந்து அவனைத் தள்ளிவிட்டுள்ளார். ஒரு சுற்றுலாப் பயணியாக இந்தியா வந்த இடத்தில், இப்படி ஒரு வக்கிரமான சூழலை எதிர்கொண்டது அந்தப் பெண்ணை மனதளவிலும் உடல் அளவிலும் பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
When this former student called me in November for suggestions for her India trip for a friend's wedding, I told her, be on guard for sexual harassment. Especially in Delhi. Here, you're just another blond. There, you'll be a target.
Sadly, came true.
Greatest culture! pic.twitter.com/LThSNG5p4r
— Gaurav Sabnis (@gauravsabnis) January 16, 2026
இந்தச் சம்பவத்தில் மிகவும் கொடுமையான விஷயம் என்னவென்றால், அந்தச் சிறுவனைத் திருத்த வேண்டிய அவனது தாயும் சகோதரியும், அந்தப் பெண்ணையே குற்றம் சாட்டியதுதான். “என் மகன் இதற்கு முன் பொன்னிறத் தலைமுடி (Blonde) கொண்ட பெண்களைப் பார்த்ததில்லை, அதனால் ஆர்வத்தில் அப்படிச் செய்துவிட்டான்” என்று அவர்கள் கூறியது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. “இது வெறும் விளையாட்டு அல்ல, ஒரு பெண்ணின் கண்ணியத்தைப் பாதிக்கும் குற்றம்” என இணையவாசிகள் பலரும் அந்தச் சிறுவனின் தாயைக் கண்டித்து வருகின்றனர். இத்தகைய வளர்ப்பு முறையே ஆண்களின் தவறான நடத்தைக்குக் காரணமாக அமைவதாகக் கூறி, பல இந்தியர்கள் அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டு வருகின்றனர்.
