சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, காண்போரை நிலைகுலையச் செய்துள்ளது. முதலைகள் நிறைந்த நீர்நிலையில் எந்தவித அச்சமும் இன்றி குதித்த ஒரு நபர், ஒரு மிகப்பெரிய முதலையின் வாயைத் தனது வெறும் கைகளால் திறந்து அதற்கு உணவளிப்பதோடு, ஒரு விளையாட்டுப் பொம்மையைப் போல அந்த முதலையைத் தூக்கி மறுபுறம் எறிகிறார். அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் கத்திய போதிலும், அந்த நபர் மிகவும் நிதானமாக இந்த ஆபத்தானச் செயலைச் செய்து முடித்துள்ளார்.
இந்த வீடியோ குறித்து இணையதள பயனர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்று கூறினாலும், மற்றவர்கள் இது 2016-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட உண்மையான வீடியோ என்றும், அந்த நபர் முதலைகளுடன் பழகியவர் என்றும் வாதிடுகின்றனர். எது எப்படியாக இருந்தாலும், உலகின் மிகக் கொடூரமான வேட்டைக்காரனாகக் கருதப்படும் முதலையுடனான இந்தத் துணிச்சலான விளையாட்டு தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
