அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வங்கதேச, மொரீஸியஸ் நாட்டு தலைவர்களை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி.

ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் 9 மற்றும் 10ஆம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் உலக தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி  சந்திக்க இருக்கிறார். ஜி-20 மாநாட்டில் பங்கேற்க வரும் உலக தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அதன்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வங்கதேச, மொரீஸியஸ் நாட்டு தலைவர்களை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி. தொடர்ந்து இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாட்டு தலைவருடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்

செப்டம்பர் 10ஆம் தேதி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனையும் பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். டெல்லியில் 15 க்கும் அதிகமான உலக நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்பு ஆலோசனைக்கு திட்டமிடப்பட்டுள்ளது.