மே மூன்றாம் தேதியிலிருந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இடங்களில் ஒன்றான மணிப்பூரில் குக்கி மற்றும் மேத்தி இன மக்களுக்கு இடையிலான நடந்து வரும் போராட்டம் வன்முறையாக மாறி,  கிட்டத்தட்ட ஒரு 140  நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக மணிப்பூர் காவல்துறை,  அஸ்ஸாம் ரைபிள் மற்றும் 89 துணை ராணுவ ப டையினர் அங்கு குவிக்கப்பட்ட னர். இருந்தாலும் இதுவரை வன்முறை கட்டுக்குள் வராத ஒரு சூழல் தான் நிலைகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மூன்று நாட்களாகவே மணிப்பூரில் மீண்டும் வன்முறை அதிகமாகி வருகிறது.  விஷ்ணுபூர்,  காங்க்கன், தவ்பால், இம்பால், இம்பால் கிழக்கு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

பேரணியாக நடந்து செல்பவர்களை கட்டுப்படுத்துவதற்காக நடந்த மோதலில் நான்கு பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் மோரே நகரத்திலும் தமிழர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிறது. குறிப்பாக மணிப்பூரில் உள்ள உள்ளூர் ஊடகங்களில் அங்குள்ள குக்கி மக்கள் கட்டாயமாக தமிழர்களை வெளியேற்றுவதாகவும்,  தமிழர்களின் சொத்துக்களையும் உடைமைகளையும் பறிப்பதாகவும் செய்திகளும் வெளியானது.

இந்நிலையில் அதற்கு உள்ள மணிப்பூர்  தமிழ் சங்கம் இதற்க்கு மறுப்பு தெரிவித்து விளக்கத்தை கொடுத்துள்ளது. மோரே  நகரத்தை விட்டு யாரும் வெளியேற கட்டாயப்படுத்தவில்லை. சில ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்புகிறது. உண்மையின் தன்மையை அறிந்து செய்திகளை வெளியிடுமாறு மணிப்பூர் தமிழ் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.