உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்து இன்றோடு 364வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்த ஆதரவளித்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் அந்த நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவி வழங்குவதுடன் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்து வருகின்றது. இந்த போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.

ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் போர் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்த போருக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார். இந்த பயணம் உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசு பயணமாக போலந்துக்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவர் ரயில் மூலமாக உக்ரைன் தலைநகர் கீவிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் உக்ரைன் அதிபரை நேரில் சந்தித்துள்ளார்.

இந்த நிலையில் ஜோ பைடனின் உக்ரைன் பயணம் குறித்து ரஷ்யாவிற்கு தூதரக வழியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரின் பயணத்தின் போது பாதுகாப்பிற்கு எந்தவித உத்தரவாதமும் ரஷ்யா அளிக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோ கூறியதாவது “அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பயணம் குறித்து தூதரகம் வழியாக ரஷ்யாவிற்கு அமெரிக்கா தகவல் கொடுத்தது. ஆனால் நாங்கள் அவரின் பாதுகாப்பிற்கு எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.