நைஜீரியா நாடு நீண்ட காலமாக பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அம்பாராம் மாகாணத்தில் அமைந்துள்ள இரண்டு காவல் நிலையங்கள் மீது கையடி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கொடூர தாக்குதலில் 8 காவல் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பியாப்ரா பழங்குடி மக்கள் இயக்கம் பொறுப்பேற்று கொண்டது. மேலும் தாக்குதலுக்கு காரணமான 6 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை அடுத்து தப்பியோடியவர்களை பிடிப்பதற்கு தேடுதல் பணியும் தொடங்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.