நாட்டில் குறைந்து வரக்கூடிய பிறப்பு விகிதத்தினை சமாளிப்பதற்காக  புதியதாக திருமணமான தம்பதியினருக்கு சீனா சலுகைகளை வழங்குகிறது. அதன்படி அந்நாட்டின் சில மாகாணங்கள் 30 தினங்கள் வரையிலும் ஊதியத்தோடு திருமண விடுமுறை வழங்குகிறது. சீன மாகாணங்கள் அதன் திருமண விடுப்பு கலாச்சாரத்தை மாற்றி அமைக்கிறது. ஏனெனில் குறைந்து வரக்கூடிய பிறப்பு விகிதத்தினை சமாளிக்க சீனா, இந்த முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.

அங்கு குறைந்துவரும் மக்கள் தொகையானது அந்நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. இளம் தம்பதியினர் திருமணம் செய்து குழந்தைகளை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த மாபெரும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சீனாவினுடைய சில மாகாணங்கள் 30 தினங்கள் திருமண விடுமுறையை அளித்தாலும், சில மாகாணங்கள் அதை 10 நாட்களாக நிர்ணயித்துள்ளது. கன்சு, ஷாங்க்சி ஆகிய மாகாணங்கள் 30 நாட்களை கொடுக்கிறது. ஆனால் ஷாங்காய் 10 தினங்கள் வரை விடுமுறையை வழங்குகிறது. அதேபோல் சிச்சுவான் இன்னும் 3 நாட்களை மட்டுமே வழங்குகிறது.