மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தும் வேலைக்கு வர யாரும் தயாராக இல்லை என்று ஒரு பன்னாட்டு நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள எண்ணெய் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. கடலுக்கு அடியில் உள்ள அடுக்குகளில் இருந்து எண்ணெய் எடுக்கும் பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனம் திணறி வருகின்றது. தினம்தோறும் 12 மணி நேரம் வேலை,பணியாளர் இரண்டு ஆண்டுகள் தங்க முடிவு செய்தால் வேலையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு ஒரு கோடி வரை சம்பளம் உள்ளிட்ட பிற பலன்கள் கிடைக்கும். இருந்தாலும் இந்த வேலையை செய்ய யாரும் முன் வரவில்லை என்று அந்நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.