வடகிழக்கு பருவக்காற்று முடிந்து தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகி உள்ளதை விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளியில் இருந்து படம் பிடித்துள்ளது. இந்திய பெருங்கடலில் வேகமாக சென்று கொண்டிருக்கும் இந்த சூறாவளி மொருசியஸ்-ஐ தாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சூறாவளியால் 120 கிலோமீட்டர் காற்று வீசுவதுடன் கனமழை, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அதிபயங்கர சூறாவளியால் தென்னாப்பிரிக்கா, ஜாம்பியா உள்ளிட்ட பகுதிகளில் மழை மற்றும் சூறைக்காற்று வீசும் எனவும் வேகமாக சூறாவளியின் கண் பகுதி நகரும் வீடியோவை சர்வதேச ஆய்வு மையம் வெளியிட்டுள்ள நிலையில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.