ரஷ்ய அதிபர் புதினுக்கு அடுத்த மாதம் புதிய சிகிச்சை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் புதினின் உடல் நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்து இருக்கின்றது.

கடந்த வார இறுதியில் புதின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை எனவும் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் மார்ச் 5-ம் தேதி புதிய சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தற்போதைய தகவல் தெரிவிக்கின்றது.