ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ராணுவத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் ஆராய்ச்சி சேவை தாக்கல் செய்த சமீபத்திய அறிக்கையின்படி, ஈரான் உடனான 40 நாள் போரில் அமெரிக்காவின் 42 ராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இதில் உலகின் மிகவும் அதிநவீன மற்றும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படும் எஃப்-35 ஸ்டெல்த் போர் விமானங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதல்களால் அமெரிக்காவிற்கு பல கோடி டாலர் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஈரானின் வரையறுக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளை அமெரிக்கா குறைவாக மதிப்பிட்டதன் விளைவாகவே இத்தகைய பெரும் இழப்பைச் சந்தித்ததாக ராணுவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். போர்நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் சூழலிலும், இத்தகைய தரவுகள் அமெரிக்காவின் ராணுவ பலம் குறித்த விவாதங்களை உலகளவில் ஏற்படுத்தியுள்ளன.
