தற்போது ஈரான் நாடு போர் பதற்றங்களால் செய்திகளில் அதிகம் அடிபட்டாலும், அந்த நாடு தொழில்நுட்பம் மற்றும் சாதனைகளுக்கும் பெயர்பெற்றது. இந்தச் சூழலில், ஈரானின் மிகப்பெரிய பணக்காரர் யார் என்ற ஆர்வம் பலரிடையே எழுந்துள்ளது. பிரபல மின் வணிகத் தளமான ‘ஈபே’ நிறுவனத்தைத் தொடங்கிய பியர் ஒமிடியார் தான் ஈரானின் மிகப்பெரிய பணக்காரர் ஆவார்.
பாரிஸில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இவரது பெற்றோர் ஈரானியர்கள். 2026-ஆம் ஆண்டு தரவுகளின்படி, இவரது சொத்து மதிப்பு சுமார் 11.8 பில்லியன் டாலர்களாக உள்ளது.
டிஜிட்டல் தளங்கள் மட்டுமின்றி, கலிபோர்னியா மற்றும் மெக்சிகோவில் உள்ள சொகுசு விடுதிகளிலும் இவர் பெருமளவு முதலீடு செய்துள்ளார். இவரை இந்தியப் பணக்காரர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இவரை விட சுமார் 9 முதல் 10 மடங்கு அதிகமாகும்.
பியர் ஒமிடியார் தனது அறிவாற்றலால் தொழில்நுட்பத் துறையில் ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளதுடன், ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கோடீஸ்வரராகத் திகழ்கிறார்.
