வேலூர் மாவட்டம் ஏரி குத்தி மேடு பகுதியில் அன்சார் (58)-மும்தாஜ் (48) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அன்சார் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் நிலையில் இவர்களுக்கு 2 மகள்களும், இம்ரான் (28) என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில் இம்ரனுக்கு அர்ஷியமா என்ற மனைவியும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் தற்போது அர்ஷியமா 5 மாத கர்ப்பிணி ஆக இருக்கிறார். இதில் ஆன்சர் மற்றும் அவருடைய மனைவி மும்தாஜ் இருவரும் வெளியில் ரூ.28 லட்சம் வரை கடன் வாங்கியுள்ள நிலையில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 2 1/2 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளனர். இந்த கடனை அவர்கள் திருப்பி செலுத்தாத நிலையில் நிதி நிறுவனத்திலிருந்து பணத்தை திரும்ப செலுத்துமாறு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று அன்சர் வீட்டிலிருந்து ‌ வெளியே சென்று விட்டார்.

அப்போது இம்ரானின் மனைவி மருத்துவ பரிசோதனைக்காக வெளியே சென்றுள்ளார். அந்த சமயத்தில் நிதி நிறுவனத்திலிருந்து பணத்தை திரும்ப செலுத்துமாறு கூறி கதவைத் தட்டியுள்ளனர். இதனால் அவமானத்தில் வீட்டில் இருந்த மும்தாஜ் மற்றும் அவருடைய மகன் இம்ரான் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் அதற்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. எங்களை காட்டி அன்சர் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். எங்களால் அவர்களிடம் பதில் சொல்ல முடியவில்லை. பெட்ரோல் வாங்கிவிட்டு வருவதாக கூறிவிட்டு என் அப்பா வெளியே சென்ற நிலையில் அவர் வரவில்லை. இதனால் எங்களுக்கு வேறு வழியில்லாமல் இப்படி ஒரு முடிவை எடுக்கிறோம் என்று கதறி அழுதவாறு வீடியோ எடுத்து அதை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.