ஒரு தம்பதியருக்குப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளின் முக அமைப்பில் சந்தேகம் ஏற்பட்டு டிஎன்ஏ பரிசோதனை செய்தபோது, அதில் ஒரு குழந்தையின் மரபணு தாய் மற்றும் தந்தை என இருவருடனும் பொருந்தவில்லை என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்துள்ளது.

மேலும் சத்தீஸ்கரைச் சேர்ந்த உஷா சிங் என்ற பெண்மணிக்கு தனியார் மருத்துவமனையில் பிரசவம் நடந்தபோது, தங்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்ததாகக் கூறப்பட்ட நிலையில், பின்னர் இரண்டு பெண் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டதால் தம்பதியருக்கு சந்தேகம் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில், ஒரு குழந்தையின் டிஎன்ஏ பெற்றோருடன் ஒத்துப்போகாததால் மருத்துவமனையில் குழந்தைகள் மாற்றப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் உறுதியானது.

இந்த மருத்துவமனை அலட்சியம் மற்றும் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் இந்த பிரசவ வழக்கு தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.