மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில், 15 வயது சிறுமி ஒருவரை அவரது சொந்தத் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நிலம் சம்பந்தமான பணம் வசூலிக்கச் செல்வதாகக் கூறி, தனது மகளைக் கூட்டிச் சென்ற அந்த நபர், காட்டில் குறுக்கு வழி இருப்பதாகக் கூறி ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்தச் சிறுமியை மரண பயத்தில் மிரட்டி, இந்தக் கொடூரத்தைச் செய்துள்ளார். மேலும், இதை யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

ஆரம்பத்தில் பயந்துபோய் மௌனமாக இருந்த அந்தச் சிறுமி, பின்னர் தனது தாயிடம் நடந்த உண்மைகளைக் கூறி அழுதுள்ளார். உடனடியாகத் தாய் மற்றும் உறவினர்களுடன் காவல் நிலையம் சென்ற சிறுமி புகார் அளித்தார். சிறுமியின் புகாரைப் பதிவு செய்த போலீஸார், அந்த நபரை போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த நபர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.