உலக நாடுகளின் பொருளாதாரம், ராணுவ திறன், சமூக நிலை, கலாசார செல்வாக்கு, சர்வதேச அரங்கில் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் சிறந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்படுகிறது.

அந்த வகையில், ஆஸ்திரேலியாவைத் தலைமையிடமாகக் கொண்ட லோவி இன்ஸ்டிடியூட் தனது ‘ஆசிய சக்தி குறியீடு’ அறிக்கையை வெளியிட்டுள்ளது. பொருளாதாரத் திறன், ராணுவத்திறன், நிலைத்தன்மை, எதிர்கால வளங்கள், பொருளாதார உறவுகள், பாதுகாப்பு கூட்டணிகள், ராஜதந்திர மற்றும் கலாசார செல்வாக்கு உள்ளிட்ட எட்டு பிரிவுகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை படி, அமெரிக்கா 80.5 புள்ளிகளுடன் முதல் இடத்தில் திகழ்கிறது. அதனைத் தொடர்ந்து சீனா 73.7 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த இரண்டு நாடுகளும் தற்போதைய உலகளவில் மிக சக்திவாய்ந்த நாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்பிறகு, இந்தியா 40 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ராணுவ திறன் அதிகரித்தமை, சர்வதேச அரங்கில் உயர்ந்த ராஜதந்திர செல்வாக்கு உள்ளிட்டவை இந்த முன்னேற்றத்திற்குக் காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்து, ஜப்பான் – 38 புள்ளிகள் (4வது இடம்), ரஷ்யா – 32.1 புள்ளிகள் (5வது இடம்) இருக்கிறது. மேலும் இந்த நாடுகள் “நடுத்தர சக்திவாய்ந்த நாடுகள்” என அறிக்கையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.